அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டலாமே!

Update: 2025-12-28 14:02 GMT

பென்னாகரம் அருகே உள்ள குள்ளாத்திரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் அமைந்துள்ளது ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி. இந்தப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் சமூக விரோதிகள் பள்ளிக்குள் நுழைந்து, இரவு நேரங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, சூதாட்டங்களில் ஈடுபடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாட்டில்களை பார்த்து முகம் சுளிக்கின்றனர். எனவே இந்தப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்