ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எல்லை பலகைகள், தகவல் பலகை, பெயர் பலகைகள் போன்றவைகளில், விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பர போஸ்டர்களால் அந்த பலகைகளில் உள்ள விவரங்கள் பொதுமக்களை சென்று சேர்வது இல்லை. எனவே அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகைகள் மீது போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?