நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2025-12-28 13:58 GMT

தர்மபுரி நகரை ஒட்டி கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ராமாக்காள் ஏரியின் கரையோரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் இந்த நடைபாதை பகுதி தற்போது மது அருந்தும் இடமாக மாறி விட்டது. எனவே இந்த நடைபாதையை சீரமைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் மீண்டும் இந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்