சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி மெயின்ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே (பழைய தமிழ்நாடு கிராம வங்கி தெரு) சிமெண்டு சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடிபோட்டு மூடப்படாமல் இருந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்த செய்தி கடந்த வாரம் புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு சிலாப் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.