திருச்சி கல்லுக்குழி உலகநாதபுரம், டி.வி.எஸ். டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவுப்பணி முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் இருட்டில் நாய்கள் இருப்பது தெரியாமல் அதன்மீது வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.