சேலம் 4 ரோடு சாலை, பெரமனூர் மற்றும் சேலத்தின் பிற பரபரப்பான சாலைகளின் இருபுறங்களிலும் விற்பனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிலர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.