சேந்தமங்கலம் தெப்பக்குளம் பகுதியில் பிளாஸ்டிக் உள்பட குப்பை கூளங்கள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் அங்கு மேய்ச்சலின் போது பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுகிற நிலைமை காணப்படுகிறது. இதனால் கால்நடைகளின் உடல் நிலைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் குப்பை கூளங்களை போடாமல் மாற்று இடத்தில் கொட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.