விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகர் 10 மற்றும் ௧௧-வது தென்வடல் தெருவில் சில மின் கம்பிகள் தாழ்வாக செல்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கண்ட பகுதியில் தாழ்வான மின் கம்பிகள் சரி செய்யப்பட்டது. தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.