பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையத்தில் சிலர் பகல்-இரவு நேரங்களில் மது அருந்துவது மட்டுமில்லாமல் பயணிகளிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.