பராமரிக்கப்படாத கழிப்பிடங்கள்

Update: 2025-12-21 12:25 GMT

கோவையை அடுத்த சின்னதடாகம் பகுதியில் பஸ் நிலையம், இந்திரா நகர், ஆர்.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பில் இல்லை. இதனால் துர்நாற்றம் வீசும் கழிப்பிடங்களாக உள்ளன. இதன் காரணமாக அவற்றை பயன்படுத்தவே பொதுமக்கள் தயங்குகிறார்கள். இது மட்டுமின்றி பிரம்மதேவன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய இடங்களில் பொது கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்