பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பொம்மனப்பாடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால், குடியிருப்பு பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.