கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் ஒரு ஊர்புற நூலகம் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த நூலகத்தின் கட்டிடம் மிகவும் பழமையானது. நூலக அறை மிகவும் குறுகியதாக உள்ளதால், புத்தகங்கள் வைப்பதற்கும் போதிய அலமாரிகள் இல்லை. மேலும், இங்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நின்று கொண்டு தான் புத்தகங்களை வாசித்து விட்டு செல்கின்றனர். இதனால், வாசகர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி இந்த கட்டிடத்தின் எதிரே சேதமடைந்த நிலையில் ஒரு கட்டிடம் உள்ளது. அதனை இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.