பொத்தையடியில் இருந்து ஆண்டிவிளைக்கு செல்லும் சாலையில் கரம்பவிளை கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையின் கான்கிரீட் மேற்கூரை மற்றும் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பஸ்சிற்காக வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.