விருதுநகர் மாவட்டம் சின்னையாபுரத்தில் இருந்து ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலையின் இருபக்கமும் உள்ள தடுப்பு சுவர்கள் மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையின் இரு புறங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரும் பள்ளங்கள் உள்ளன. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலையின் பக்கவாட்டு தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.