சேந்தமங்கலம் ராமநாதபுரம் புதூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் நுழைவு வாயில் சுவற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற தேசத்தலைவர்களின் படம் வரையப்பட்டிருந்தது. அந்த படங்கள் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது. காலப்போக்கில் அந்த சுவற்றில் வர்ணங்கள் பெயர்ந்து விழுந்ததால் முழுவதுமாக சேதமாகி உள்ளது. எனவே மீண்டும் அந்த சுவற்றில் தேசத்தலைவர்களின் படங்கள் புதுப்பொலிவு பெறும் வகையில் வரைவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.