கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் நூலகம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இங்கு செல்ல பாதை வசதி இல்லை. மேலும் பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி காணப்படுகிறது. இந்த கழிப்பறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?