பெரம்பலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.