திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு ஏற்படும் சிறு, சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் திருப்பைஞ்சீலியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த புறகாவல் நிலையம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்காக இப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொருள் விரையமும், கால விரையமும் ஏற்படுகிறது. எனவே திருப்பைஞ்சீலியில் உள்ள புறகாவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தினமும் காவலர்களை பணியில் அமர்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.