மதுரை மாவட்டம் மேலூர் சிவன் கோவில், ஆறுமுகம் பிள்ளை தெரு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைகின்றனர். மேலும் இந்த குரங்குகளால் விபத்துகள் ஏதும் ஏற்படும் முன்பாக அதிகாரிகள் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.