பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை

Update: 2025-12-07 16:02 GMT

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சியில் செல்லாண்டிபுரம் அமைந்துள்ளது.இந்த ஊரின் வழியாக புலியூர் வையம்பட்டி மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி கரூர், ஈரோடு, மணப்பாரை, கடவூர், இடையபட்டி, வீரப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களும், மேலும் சில நகர பஸ்களும் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 12 மணி வரை இயங்கி வருகின்றன. இந்த ஊரின் பஸ் நிறுத்தத்திற்கு வில்வமரத்துபட்டி, நத்தப்பட்டி, சோனம்பட்டி நல்லமுத்துபாளையம், கீழடை, சுக்காமேடு, சின்னகிணத்துபட்டி, மேலடை, தேவச்சிகவுண்டனூர்,மாணிக்கபுரம், பாலப்பட்டி, தெற்குமாணிக்கபுரம்,கள்ளபொம்மன்பட்டி, குறளப்பன்ட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து பஸ் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். இந்த பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும்போது வெயில் மற்றும் மழை காலங்களில் பயணியர் நிழற்குடை வசதி இல்லாமையால் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் அமர்ந்திருந்து பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இங்கு அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்