கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் வேலாயுதம்பாளையம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பஸ் நிறுத்தம் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவு பயணம் செய்யக்கூடிய கரூர் செல்லும் நகர பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் தான் நின்று செல்லும். இந்நிலையில் இந்த பஸ் நிறுத்த நிழற்குடை அமைத்து பல வருடங்கள் ஆனதால், மேற்கூரையில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் ஒருபுறத்தில் இடிந்துள்ளது. இதனால் மாணவர்கள் சாலையிலேயே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே இந்த நிழற்குடையை இடித்துவிட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.