தேங்கிய மழை நீரால் கொசுத்தொல்லை

Update: 2025-12-07 13:36 GMT

கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி ஊராட்சி பண்டுதகாரன் புதூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் கழிவுநீருக்காக அமைக்கப்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. பல வருடங்களாக தேங்கி இருப்பதால், அந்த நீர் பச்சை நிறாமாக மாறி உள்ளது. மேலும் இதில் இருந்து அதிகளவு கொசு உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரவி கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிக்கிசை பெற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்