சிவகாசி அம்மன் கோவில் பட்டி தென்பாகத் தெரு பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்களை குரைத்து கொண்டே துரத்தி சென்று கடிக்கின்றது. தொடர்ந்து தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.