மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில் இருந்து எல்லை ரோடு வழியாக மணப்பள்ளி செல்லும் சாலையோரம் மயானம் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மின் கம்பிகளில் சாலையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்கள் உரசியவாறு செல்கின்றன. இதனால் அடிக்கடி மின் வினியோகம் தடைப்படுகிறது. எனவே மின் கம்பிகளை உரசி செல்லும் சீமை கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.