நடைபாதையில் பள்ளம்

Update: 2025-12-07 12:51 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்து செல்லும் வகையில் சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் மீது பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் நடைபாதையில் உடைப்பு ஏற்பட்டு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் நிலைதடுமாறி இந்த பள்ளத்தின் வழியாக வாய்க்காலில் விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நடைபாதையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்