பாப்பிரெட்டிப்பட்டி-பொம்மிடி மெயின் ரோட்டில் உள்ள வெங்கட சமுத்திரம், நான்கு ரோட்டில், 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு வரும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு ரோட்டிலும், அருகிலும் அமர்ந்து தகராறில் ஈடுபடுகின்றனர். பாட்டில்களை உடைத்தெறிகின்றனர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்களும், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் அமர்ந்து குடிப்பதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.