பாப்பிரெட்டிப்பட்டி நகரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், குடியிருப்பு வீடுகள், விடுதிகள், கோவில்கள் உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் வீடுகளில் புகுந்து வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து செல்கிறது. பள்ளி குழந்தைகள், பொதுமக்களை அச்சறுத்து கடிக்கின்றது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும்.