ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்

Update: 2025-12-07 10:13 GMT

குமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நீர்பாசனத்திற்காக குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் ஆகாயத்தாமரையும், பிறநீர்வாழ் தாவரங்களும் செழித்து வளர்ந்து தண்ணீர் முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சூரிய ஒளி தண்ணீரில் பட வாய்ப்பில்லை. ஆகாயத்தாமரையால் கால்நடைகள் மற்றும் மக்கள் குளிக்கவும் இடையூறாக உள்ளது. இதேபோல் ஆறுகளிலும் ஆகாயத்தாரைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. எனவே, குளம் மற்றும் ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்