இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் இளம்பிள்ளை ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுத்தமாக இருந்தது. ஆனால் தற்போது ஆகாயத்தாமரை, செடி, கொடிகள் வளர்ந்து புதா்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சாக்கடை கழிவுநீர் அதிகளில் ஏரியில் கலக்கப்படுகிறது. இதனால் ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இளம்பிள்ளை ஏரியை தூர்வாரவும், சாக்கடை கழிவுநீரை ஏரியில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் முன்வர வேண்டும்.