சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருந்து ஆனையம்பட்டி செல்லும் வழியில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பயிற்சி நிறுவனம் சுற்றுச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் வளாகம் முழுவதும் புதர் மண்டி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்புகள், விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் அச்சத்துடனேயே பயிற்சி நிறுவனத்திற்கு சென்று வருகின்றனர். எனவே புதர்களை சுத்தப்படுத்தி, சுற்றுச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.