தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-23 17:31 GMT

பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டி பகுதியில் பென்னாகரம்-நாகமரை பிரதான சாலையில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை கூட்டமாக சேர்ந்து வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பதும், குரைப்பதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்