உத்தமபாளையம் கிராமச்சாவடி வீதி வழியாக அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், கல்லூரி, பள்ளிகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. ஆனால் இந்த வீதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள், மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?