தேவதானப்பட்டி அருகே கெங்கவார்பட்டி பகவதி நகரில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அது சீரமைக்கப்பட்டது. ஆனால் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகத்தை உடனடியாக திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.