விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரை துரத்தி சென்று கடிக்கின்றது. இதனால் ஏராளமானோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?