ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள முக்கிய சாலைகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் நடைபாதையினர், வாகனஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. மேலும் இந்த தெருநாய்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொண்டு வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.