ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை அருகே பாம்பாறு செல்கிறது. இதில் தடுப்பணை வசதி இல்லை. இதனால் மழை பெய்யும் காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தும் அனைத்தும் கடலில் கலந்து வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.