புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை அருகே தொடக்கப்பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் செல்லும் மின்கம்பிகளில் செடி -கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தின் மீது படர்ந்து இருந்த செடி- கொடிகளை அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.