பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட நேரு வீதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. அத்துடன் அங்குள்ள சாக்கடை கால்வாய் மண், புதர்கள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு கிடக்கிறது. அதில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே கழிப்பிடம் மற்றும் கால்வாயை சீரமைக்க வேண்டும்.