கோவை மருதமலை ரோடு திருவள்ளுவர் நகரில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் ெபாதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. குறிப்பாக பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. எனவே அந்த பகுதியில் தெருநாய்கள் ெதால்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.