மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரங்களில் இருபுறமும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு செடிகளுக்கு இடையே உள்ள பள்ளங்கள், மேடுகள் தெரியாததால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இருபுறமும் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.