திருச்சி கோ-அபிஷேகபுரம் சக்தி நகரில் உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் அருகே கழிவுநீர் வாய்க்காலின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் தற்போது விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. எனவே இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் இடிந்து விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.