பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2025-11-16 17:26 GMT

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலயத்தில் உள்ள பொது சுகாதார வளாகம் செயல்பாடுன்றி கடந்த சில மாதங்களாக உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அந்த இடம் சுகாதாரமற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. பூட்டியே கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சங்கர், சேலம்.

மேலும் செய்திகள்