திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. ஏ.டி.எம். மையமும் பூட்டியே கிடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ஏ.டி.எம். மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.