விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் பெரும்பாலான முக்கிய சாலைகளின் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதோடு அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து சமந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை விரைந்து பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?