பல்லவன் குளம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-11-16 14:42 GMT

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பல்லவன் குளம் உள்ளது. இந்த குளத்தை மன்னர் காலத்தில் இருந்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாமல், குளத்தின் வடக்கு பகுதியில் கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து காணப்படுகிறது. மேலும் இந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு மிதப்பதால் தண்ணீர் சுகாதாரமின்றி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்