திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அரசு பணி மனையிலிருந்து நெடுந்தூரப் பயணமாக சென்னைக்கு இரவு 8.15- க்கும் 9 மணிக்கும் முன்பதிவு வசதியுடன் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள 68 கிராமங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் இப்பஸ்களையே நம்பி உள்ளனர். 8.15-க்கு இயக்கப்படும் சென்னை பஸ் சரியான நேரத்திலும், 9 மணிக்கு இயக்கப்பட வேண்டிய பஸ் 8.30-க்கும் இயக்கப்படுவதால், குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும் துயரத்துக்கு உள்ளாகின்றனர். இதுபற்றி கிளை மேலாளிடம் புகார் அளித்தும், டிரைவர்கள் தன்னிச்சையாக செயல்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.