கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லைகள் அதிகரித்துள்ளது. அவை நடைபாதைகளில் மற்றும் சாலையோரங்களில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் உள்பட பாதசாரிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.