கோவையை அடுத்த வெள்ளக்கிணறு சவுடாம்பிகை நகர், ராகவேந்திரா கார்டன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. சில நேரங்களில் கடித்தும் விடுகின்றன. இதனால் பொதுமக்கள் வெளிேய நடமாடவே அச்சப்படுகிறார்கள். எனவே உடனடியாக அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.