மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா புதுப்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. குரங்குகள் அப்பகுதி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு மற்றும் பொருட்களை எடுத்து செல்வதுடன், மக்களையும் கடிக்க துரத்தி அச்சுறுத்தி வருகிறது. மேலும் வீட்டின் மேற்கூறை ஓடுகளையும் சேதப்படுத்துகிறது. இவ்வாறு தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?