திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னகர், காமராஜபுரம், செல்வநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளில் மிக குறைந்த அளவே மின் வெளிச்சம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் உள்பட குடியிருப்புவாசிகள் கடைகளுக்கு சென்று வர அச்சப்படுகின்றனர். மேலும் முதியவர்கள் இருட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.